Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறான். மருத்துவர்களைப் பார்த்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில் இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு என்கிறார்கள் சிலர். இதென்ன பிரச்னை. அறுவை சிகிச்சை தவிர்த்து வேறு தீர்வுகள் கிடையாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு. லும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு உங்கள் நண்பருக்கு இருப்பதாகச் சொல்லும் அறிகுறிகள் 'ஃப்ரோஸன் ஷோல்டர்' (frozen shoulder) எனப்படும் பிரச்னையாகத் தெரிகிறது. தோள்பட்டையின் பந்து கிண்ண மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் இறுகிப்போவதால்தான் (Tightness) ஃப்ரோஸன் ஷோல்டர் என்கிற பிரச்னையே வருகிறது. இதனால் தோள்பட்டையை உயர்த்தவோ அல்லது சுழற்றவோ முடியாத அளவுக்குக் கடுமையான வலியும் இயக்கம் முடக்கமும் ஏற்படும். ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னைக்கான பிரதான காரணங்கள், சர்க்கரைநோய், தைராய்டு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவைதான். ஃப்ரோஸன் ஷோல்டர் பாதிப்புக்கு எடுத்த உடனேயே அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. முதலில் பிசியோதெரபி சிகிச்சையே பரிந்துரைக்கப்படும். அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்தில் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் செய்யச் சொல்வோம். ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் (Diabetes), தைராய்டு (thyroid) மற்றும் கொலஸ்ட்ரால் (cholesterol) பிரச்னைகள் உள்ளனவா என்று உறுதிசெய்ய வேண்டும். பிசியோதெரபியில் பலன் இல்லையெனில், மயக்க மருந்து கொடுத்துத் தோள்பட்டையைத் தளர்வாக்கும் சிகிச்சை (Manipulation under anesthesia) செய்யப்படும். Doctor Vikatan: தோள்பட்டையிலிருந்து விரல்களுக்கு இறங்கும் வலி. எப்படிப்பட்ட சிகிச்சை தேவை? பிசியோதெரபியில் பலன் இல்லையெனில், மயக்க மருந்து கொடுத்து, தோள்பட்டையைத் தளர்வாக்கும் சிகிச்சை (Manipulation under anesthesia) செய்யப்படும். இதிலும் முன்னேற்றம் இல்லையெனில், நுண்துளை அறுவை சிகிச்சை (Key-hole surgery) செய்யப்படும். ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னையானது இரண்டு தோள்பட்டைகளிலும் வரக்கூடும். பொதுவாக நாம் அதிகம் பயன்படுத்தும் கையில் இது முதலில் ஏற்படும். ஒருவேளை இடது தோள்பட்டையில் வலி ஏற்பட்டால், அது இதயப் பிரச்னை (Heart problem) காரணமாக இருக்கலாம் என்பதால் அதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். தோள்பட்டை வலி என அலட்சியமாக இருப்பது ஆபத்தாகலாம். டாக்டர் ரமேஷ்பாபு: சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்பாட் மருத்துவமனையின் இயக்குநர். எலும்பியல் மருத்துவத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிக்கவர். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/health/severe-shoulder-pain-making-it-impossible-to-raise-your-arm-is-surgery-necessary




