அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல் தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது மாநில எல்லையில் அமைந்துள்ள, கனிம வளம் அதிகம் வெட்டியெடுக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை போக்குவரத்துத் துறையை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களில் அரசு அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான வாகனங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகாவுக்கு கனிமங்கள் கொண்டு செக்லப்பட்டு வந்தது இயல்பாக நடந்து வந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு கனிமம் கொண்டு செல்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆய்வு செய்த கிருஷ்ணகிரி கலெக்டர் இந்த நிலையில் கிருஷ்ணகிரி–ஓசூர் எல்லையில் அமைந்துள்ள ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் கனிமங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள், பாகலூர் அருகே கிருஷ்ணகிரி–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சம்பங்கிரி எல்லைச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள், தளி அருகே உள்ள கும்மலாபுரம் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள் என மொத்தம் ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/governance/mineral-transport-restriction-vehicles-seized




