சென்னை, மதுராந்தகம் தொகுதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 16-ந்தேதி கடைசி நாளாகும். தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் யூனிட்டுகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்திரங்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. பின்னர் மறைமலைநகரில் இருந்து பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றப்பட்டு மதுராந்தகம் வேளாண்மை துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதை தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/voting-machines-dispatched-to-maduranthakam-constituency-by-lorry




