புதுடெல்லி பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீர் பகிர்வுக்காக 7 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன என துணை ஜனாதிபதி பெருமிதம் தெரிவித்து உள்ளார். புதுடெல்லியில் 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சியை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்து பேசினார். விலைமதிப்பில்லா வளம் அவர் பேசும்போது, நீர் தட்டுப்பாடு தொடர்ந்து ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்றார். விலைமதிப்பில்லா வளங்களில் ஒன்றான நீரை பாதுகாப்பதில் மிகப்பெரிய விழிப்புணர்வு வர வேண்டும் என்று அப்போது அவர் கேட்டு கொண்டார். அவர் தொடர்ந்து பேசும்போது, நான் தண்ணீர் பற்றாக்குறையான பகுதியில் இருந்து வந்தவன். ஆயிரம் அடி ஆழத்தில் கூட எங்களுக்கு நீர் கிடைக்கவில்லை. என்னுடைய பகுதியில் விவசாயம் என்பது ஒரு கடினம் வாய்ந்த பணியாக இருந்தது என்றார். நீருக்காக 3-ம் உலகப்போர் ஏற்பட கூடும் என உலகத்தில் உள்ள ஒவ்வோர் அறிவாளியும் கூறி வருகிறார். 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 19 ஆயிரம் கி.மீ. ரதயாத்திரை மேற்கொண்டேன். அப்போது ஆறுகளை இணைப்பது உள்ளிட்ட 5 முக்கிய விசயங்களை பற்றி சுட்டிக்காட்டினேன் என்றார். நீரை நியாயத்துடன் பயன்படுத்த வேண்டும் என கேட்டு கொண்ட அவர், நீர் மேலாண்மையில் ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் தலைமையை வெகுவாக பாராட்டிய அவர், நீர் பகிர்வுக்காக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன என்றார். கடந்த 2 நாட்களில் இமாசல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட 7 மாநிலங்கள் நீர் பகிர்வுக்காக கையெழுத்திட்டு உள்ளன. இதனை இந்த அமைச்சகத்தின் மிகப்பெரிய சாதனை என்றே நான் நினைக்கிறேன் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/under-pm-modi-leadership-seven-states-sign-water-sharing-mou




