கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் அமைந்துள்ள வி.ஐ.பி கார்டனில் வசித்துவருபவர் வினோத்குமார். இவர் கிராம்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். மதுமிதா யூடியூபராக உள்ளார். வினோத்குமார் குடும்பத்துடன் நேற்று மாலை ஷாப்பிங் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடிந்து வர இரவு சுமார் 11 மணிக்கு மேல் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்து அவர்கள் முன் கதவை திறக்க முயன்றபோது திறக்க முடியவில்லை. கதவின் லாக்கில் ஏதோ பிரச்னை ஆகிவிட்டது என நினைத்த அவர்கள், மரவேலைச் செய்யும் தொழிலாளியை அழைத்துள்ளனர். குழந்தையுடன் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அவர்கள் நிற்பதால் தொழிலாளி உடனடியாக அங்கு சென்று முன்பக்க கதவின் லாக்கை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதாக மரவேலைச் செய்யும் தொழிலாளி தெரிவித்துள்ளார். பின்னர் வினோத்குமாரின் அனுமதியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு இருந்த பகுதி கட்டர் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களது பெட்ரூமில் இருந்து சுமார் 118 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கட்டரால் உடைக்கப்பட்ட கதவு இது குறித்து தகவலின்பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மதுமிதா வீட்டில் இருக்கும் பணம், தங்க நகை உள்ளிட்டவற்றைத் தனது யூடியூப் சேனலில் வீடியோவாகப் போட்டுள்ளார். அதில் சிலர் அவரது வீட்டில் கொள்ளையடிக்கப் போவதாக கமென்ட் பதிவிட்டுள்ளனர். அதற்கு, தனக்கு 3 வீடுகள் இருப்பதாகவும் அதில் எந்த வீட்டில் கொள்ளையடிப்பாய் என கிண்டலாக மதுமிதா பதில் போட்டதாகவும் தெரியவந்துள்ளது. கமென்ட் போட்ட யாராவது கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கொள்ளை நடந்த வீடு கொள்ளை நடந்த வீட்டை போலீஸார் ஆய்வு செய்தபோது, பின்பக்க கதவு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்கில் இருந்து மின்சாரம் எடுத்து கட்டிங் மெஷின் மூலம் கதவை வெட்டி வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சுவரை நோக்கி திருப்பி வைத்து, இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/118-sovereign-gold-jewels-theft-in-a-woman-youtuber-home-who-shows-all-her-jewels-in-a-video-in-nagercoil




