சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மீண்டும் மறுசீரமைப்பு பணி நடைபெற உள்ளது. ரெயில் சேவையில் மாற்றம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்களை சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் மின்சார ரெயிலை பயன்படுத்தும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே எழும்பூர் நிலையத்தில் நடைபெறும் பணிகளால், சில விரைவு ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை நிலையங்களில் மாற்றம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட ரயில்கள் தாம்பரம் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சில ரயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலேயே சேவையை நிறைவு செய்கின்றன. இந்த நிலையில், ஆகஸ்ட் 5 முதல் 20-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்களின் சேவையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக நடைமேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில், ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல்- சென்னை எழும்பூர் விரைவு ரெயிலும் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ட்ரலுக்கு இயக்கப்பட வேண்டிய விரைவு rஎயிலும் (ஆக. 5 முதல் 19 ஆம் தேதி வரை) தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரெயில் சேவை ரத்து ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 3 புறநகர் ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 5 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது ஆகஸ்ட் 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் இரவு 11.30, 11.31, 11.50, 11.51, 12.00 மற்றும் 12.09 மணிக்கு கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், வழக்கமாக அதிகாலை 4.00 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும் முதல் மின்சார ரெயில், அந்த நாட்களில் கிண்டி நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இரவு நேர பணிகளை முடித்து வீடு திரும்புவோர், தாம்பரம் வழித்தட பயணிகள் மற்றும் அதிகாலை ரயில்களை பயன்படுத்துவோரை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்காக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-work-at-chennai-egmore-changes-in-rapid-suburban-train-services




