அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி நடிக்கும் ‘ஜனவரி 12 விடுதல’ படம் வரும் 2027 ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனிக்கப்படுபவர் இயக்குநர் அனில் ரவிபுடி. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் ரிலீஸாக தன் திரைப்படத்தைக் கொண்டு வருவதால் அந்த பண்டிகையின் இயக்குநர் என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் இயக்கிய பகவந்த் கேசரி, சங்கராந்தி வஸ்துனம், மன ஷங்கர வர பிரசாத் காரு ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றன. அனில் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த 2026 பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இப்படத்தில், வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்நிலையில், அனில் ரவிபுடி நடிகர்கள் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுவும் பொங்கல் வெளியீடாகவே அடித்த ஆண்டு திரைக்கு வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 12ம் தேதியையே படத்தின் பெயராகவும் வைத்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்ட வீடியோவில் இயக்குநர் அனிலிடம் நடிகர்கள் படத்திற்கு என்ன பெயர்? எனக் கேட்க, ‘ஜனவரி 12 விடுதல’ என கூறுகிறார். இறுதியில், இதுதான் திரைப்படத்தின் பெயர் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தாண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/director-anil-ravipudi-new-film-title-announced




