கொச்சி, ஆழ்கடல் அல்லாத, ஆழமற்ற கடலோர பகுதிகளில் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து அழிப்பதற்காக 'மங்ரோல்' என்ற புதிய போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இக்கப்பல், நேற்று இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க பெயர் இந்த கப்பலுக்கு, குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள ‘மங்ரோல்’ என்ற கடலோர நகரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய துறைமுக நகரான இது, கடல்சார் மீன்பிடி தொழிலுக்கு புகழ்பெற்ற முக்கிய மையமாக திகழ்கிறது. கடற்படை மரபு ஏற்கனவே இந்திய கடற்படையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு, கடந்த 2004-ம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பழைய ‘ஐ.என்.எஸ். மங்ரோல்’ கப்பலின் பாரம்பரியத்தை இந்த புதிய கப்பல் தாங்கி நிற்கிறது. இதன் மூலம், நாட்டின் பழைய போர்க்கப்பல்களின் பெயர்களை புதிய கப்பல்களுக்கு சூட்டி கௌரவிக்கும் கடற்படையின் பாரம்பரிய மரபு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 80% உள்நாட்டுப் பாகங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு பாகங்களை கொண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. அதிநவீன வாட்டர்ஜெட் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த போர்க்கப்பலில், எதிரி நாட்டு நீர்மூழ்கிகளை துல்லியமாக தாக்கும் டார்பிடோக்கள் மற்றும் ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. மல்டி-டாஸ்க் கப்பல் நீருக்கடியில் நடக்கும் அசைவுகளை கண்காணிப்பதுடன், கடலோரப்பாதுகாப்பு, குறைந்த தீவிரத்தன்மை கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கடலில் விரிக்கப்படும் எதிரிகளின் கண்ணிவெடிகளை முறியடிக்கும் ஆற்றல் என பல்வேறு சிறப்பம்சங்களை இக்கப்பல் கொண்டுள்ளது. இதிலுள்ள மேம்பட்ட ரேடார் மற்றும் சோனார் அமைப்புகள் கடற்படையின் கண்காணிப்பு திறனை பலமடங்கு உயர்த்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/mangrol-warship-joins-indian-navy-fleet




