மதுரை, மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழக அரசு, மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டங்களை அரசு-தனியார் பங்களிப்பு (PPP) என்ற பெயரில் முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க டெண்டர் கோரியுள்ள நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் தேவைக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு தாரை வார்க்கும் இந்த மக்கள் விரோத முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோவையின் குடிநீர் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டது. கடந்த தி.மு.க ஆட்சியில் சேலம் குடிநீர் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்க முயன்றபோது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போதைய தவெக அரசும் அதே தனியார்மயக் கொள்கையை தீவிரமாக முன்னெடுத்து, முதன்முறையாக ஒட்டுமொத்த பாதாள சாக்கடை திட்டத்தையே தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கடுமையான பாதிப்புகள் ஏற்படும் பாதாள சாக்கடை என்பது மக்களின் அடிப்படை சுகாதாரம் மற்றும் வாழ்வுரிமை சார்ந்த பொதுச் சேவையாகும். இதனை லாப நோக்கம் கொண்ட தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பின்வரும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்: பராமரிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மீது மிகக் கடுமையான கழிவுநீர்க் கட்டணங்கள் மற்றும் வரிகள் சுமத்தப்படும். மக்கள் தங்களின் புகார்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கும் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவை எதிர்பார்க்கும் அவலநிலை உருவாகும். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை தற்காலிகத் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாவார்கள். டெண்டரை கைவிட வேண்டும் மதுரைக்கு ரூ. 2,377.48 கோடியும், நாகர்கோவிலுக்கு ரூ. 189.82 கோடியும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அரசே முழு நிதி ஒதுக்கீடு செய்து பொதுத்துறை மூலம் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டருக்கு கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. இப்படி மீண்டும், மீண்டும் தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை பொதுச்சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பது அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும். மக்கள் நல அரசு என்பது பொதுச் சேவைகளை வழங்குவதிலிருந்து பின்வாங்கக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த தனியார்மய டெண்டர் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-party-urges-government-to-abandon-decision-to-privatize-underground-drainage-scheme




