கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சேகர்பாபுவிடமிருந்து பறிக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. திமுக செயற்குழு ஆகஸ்ட் 22-ம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க-வின் செயற்குழுவில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்புரீதியாக மாவட்டங்கள் 110 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் வயது உச்ச வரம்பு 70-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 110 மாவட்டங்களை வரையறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ‘தலைநகர் சென்னை, தி.மு.க-வின் கோட்டை’ என்ற நிலையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். மொத்தமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின்கீழ் வரும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று மீதித் தொகுதிகளில் மண்ணைக் கவ்வியிருக்கிறது தி.மு.க. அதிலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை த.வெ.க-விடம் பறிகொடுத்தது உடன்பிறப்புகளை உஷ்ணமாக்கியிருந்தது. நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "சென்னையில் தி.மு.க சறுக்கியதையும் கெளத்தூரில் தோற்றத்தையும் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொண்டார் தலைவர் ஸ்டாலின். கழக மாவட்ட மறுவரையறையில் தலைநகர் சென்னையை 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் வடசென்னை மாவட்ட பிரிப்பு பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திருவெற்றியூர், மாதவரம் தொகுதிகளை சென்னை வடகிழக்கு மாவட்டமாகவும், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளை சென்னை வடக்கு மாவட்டமாகவும் துறைமுருகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம் தொகுதிகளை சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு துறைமுகம், கொளத்தூர் என இரண்டு தொகுதிகளையும் பார்த்துக் கொண்டார் சேகர்பாபு. தற்போதைய மறுசீரமைப்பில் கொளத்தூர் சென்னை வடக்கு மாவட்டத்தில் துறைமுகம் சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது" என்றனர் சேகர்பாபு தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம் "சேகர்பாபுவிடமிருந்து கொளத்தூர் தொகுதியை பறிக்கவே கொளத்தூரையும் துறைமுகத்தையும் தனித்தனி மாவட்டங்களில் இடம்பெற செய்திருக்கிறார் தலைவர். கொளத்தூரில் தலைவர் ஸ்டாலின் தோற்றதால் 'சேகர்பாபுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குரல் எழுந்த நிலையில் கொளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. எந்த மாவட்டங்களுக்கு யார் செயலாளர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்றனர் தலைநகர் மா.செ-க்களைத் தூக்கியடிக்கும் ஸ்டாலின். சிதிலமடைந்த தி.மு.க கோட்டையை மீட்பாரா உதயநிதி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/governance/stalin-begins-party-restructuring-dmk-to-take-kolathur-away-from-sekarbabu




