புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பா னின் அய்ச்சி மற்றும் நயோகா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசிய போட்டியில் மொத்தம் 503 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 36 விளையாட்டுகளில் களம் காணும் இந்திய அணியில் 269 வீரர்களும், 234 வீராங்கனை களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 300-க்கும் மேற்பட் டவர்கள் முதல்முறையாக கால்பதிக்கிறார்கள். அதிகபட்ச மாக தடகள அணியில் 74 பேர் அங்கம் வகிக்கின்றனர். நடப்பு சாம்பியனான ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி, நீளம் தாண்டுதல் வீரர் ஷனவாஸ் கான். ஓட்டப்பந்தய வீராங்கனை நித்யா கந்தே ஆகியோர் சமீப கால மோசமான செயல்பாடு மற்றும் உடல்தகுதி பிரச்சினையால் ஆசிய விைளயாட்டுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-javelin-thrower-dropped-from-indian-team




