நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகிலுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தச்சுத்தொழி லாளியான சதீஷ்(வயது 45) என்பவர் திடீரென அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டாள். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சதீஷை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அருவங்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/15-year-old-girl-sexually-harassed-in-nilgiris-carpenter-arrested




