சென்னை, தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பதற்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அருவருப்பின் உச்சம் பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரை போல இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்! கண்டனம் ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தவறான பார்வை பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், நயினார் நாகேந்திரன் அவர்களே! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-ramesh-condemns-nainar-nagendran-remarks




