இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு ஆணையர்களும் மத்திய கேபினட் செயலாளருக்கு கடிதம் எழுதினார்கள் என்றும் பரபரப்பு தகவல்கள் அண்மையில் வெளியானது. இந்த பிரச்ச்சினையை கையில் எடுத்துள்ள ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி உள்ளன. அதேபோல, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறியதோடு, 48 மணி நேரம் கெடுவும் விதித்து இருந்தது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆப்ஜித் தீப்கே கூறியிருந்தார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. மும்பையில் போராட்டத்தை தொடங்கிய நாடு முழுவதும் விரிவுபடுத்த இருப்பதாகவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/election-commissioner-issue-deadline-expires-cockroach-janata-announces-protest




