தொகுதி சீரமைப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒரு முறை இம்மசோதா கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்துவிட்டது. இப்போது மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக பா.ஜ.க ஒவ்வொரு கட்சியிலும் எம்.பி.க்களை மறைமுகமாக தன் பக்கம் இழுத்து வருகிறது. ஏற்கனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவிவிட்டனர். இதே போன்று மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் கணிசமான எம்.பி.க்களைத் தங்களது கூட்டணிக்கு பா.ஜ.க கொண்டு வந்துவிட்டது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சி பக்கம் பா.ஜ.க-வின் பார்வை திரும்பி இருக்கிறது. சரத்பவார் சரத்பவார் கட்சிக்கு மக்களவையில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்குத் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) ஆதரவளிப்பதாகக் கூறப்படும் வதந்திகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைய இருப்பதாக் கூறப்படும் கருத்துகளையும் அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தை 'ஒரு தேநீர்க் கோப்பையில் எழுந்த புயல்' என்றும், இது குறித்து எந்த மீடியாவிற்கும் நாங்கள் செய்தி கொடுக்கவில்லை என்றும், மசோதா இன்னும் விவாதத்திற்கு வரவில்லை என்றும், வரும்போது 24 மணி நேரத்திற்கு முன்பு அது பற்றி முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு முன்னதாக இது குறித்து சுப்ரியா சுலே இது குறித்து தனது தந்தை சரத்பவார், கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், சசிகாந்த் ஷிண்டே ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். சுப்ரியா சுலே இது குறித்து மேலும் கூறுகையில், ''மத்திய அரசு பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து விவாதிக்கத் தயாராக இருந்தால், அந்தத் திட்டத்தை கட்சி ஆராயும். 50 சதவீத தொகுதி இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க அரசாங்கம் சம்மதித்தால் தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து நாங்கள் பரிசீலிப்போம்'' என்றும் தெரிவித்தார். சுப்ரியா சுலே பா.ஜ.க தலைமையிலான கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) நெருங்கி வருவதாக வெளியாகும் செய்திகளை மறுத்த சுப்ரியா சுலே, எங்களுக்கு பா.ஜ.க கூட்டணி அல்லது காங்கிரஸிடம் இருந்து எந்த வாய்ப்பும் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளன என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். வரும் 20 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் புதிய தொகுதி எல்லை மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை' - சரத்பவார் மகள் சுப்ரியா சுலே முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/sharad-pawars-party-to-support-constituency-delimitation-bill-what-supriya-sule-say




