சென்னை, 20-வது திருமண நாளையொட்டி மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்பது ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இதுபோன்ற ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. என நடிகர் சூர்யா “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” பட நிகழ்வில் பேசினார். நட்சத்திர ஜோடி தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த சூர்யா - ஜோதிகா, அதன் பிறகு 'பேரழகன்', 'காக்க காக்க', 'மாயாவி' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2006-ம் ஆண்டு 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இணைந்து நடித்த அவர்கள், அப்படம் வெளியான 3-வது நாளில் செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். 20 ஆண்டுகள் நிறைவு பல தம்பதிகளின் ஆதர்ச ஜோடிகளாக இருக்கும் சூர்யா - ஜோதிகாவுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திரைத்துறையினரின் திருமணம் என்றாலே நீண்ட காலம் நிலைக்காது என்ற பார்வையே நீடித்துவரும் சூழலில், சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். மீண்டும் திருமணம் இந்த தம்பதி கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளை கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக இருவரும் மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த “ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பம்” இந்நிலையில், “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” பட நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, தங்களது 20-வது திருமண ஆண்டு நிறைவு குறித்து பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “உங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி. உண்மையில், 20-வது திருமண ஆண்டு நிறைவையொட்டி இதுபோன்ற ஒன்றை செய்ய வேண்டும் என்பது ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இதுபோன்ற ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. இதில் எங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். மிகவும் அழகான தருணமாக இருந்தது. “மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொள்ள நினைத்தோம்” எங்களது திருமண வாழ்க்கைக்கு நீங்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாக அன்பும் மரியாதையும் அளித்து வருகிறீர்கள். அதனால், இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்” என்றார். சூர்யாவின் இந்தப் பேச்சு, அவர்களின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jyothikas-long-held-wish-suriya-on-their-20-years-of-married-life




