நேற்று (ஜூலை 8, 2026), மேற்கு வங்கம் பாருய்பூரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திரிணாமும் காங்கிரஸ் பேரணி நடத்தியது. அந்தப் போராட்டத்தைத் தடுக்க பாஜக-வினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கு இடையேயும் கடுமையான வாக்குவாதம், தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது முட்டைகளும் வீசப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். மம்தா பானர்ஜிவருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? - ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு! அதன் பின், பேரணி முடியும் போது, திரிணாமுல் தொண்டர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டின் முன் பெரியளவில் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தைக் கலைப்பதற்காக மம்தா பானர்ஜி வெளியே வந்தார். அப்போது தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை மம்தா பானர்ஜி அறைந்தார். கூடவே, சிலரை தள்ளவும் செய்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மம்தா பானர்ஜி, "இந்தப் பேரணியை நடத்த எங்களிடம் நீதிமன்றத்தின் அனுமதி இருந்தது. அப்படி இருந்தும், அவர்கள் எங்கள் கட்சிப் பெண்களைத் தாக்கினர். எங்களது தொண்டர்கள் பலருக்குக் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களைக் காப்பாற்றவே நான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியிருந்தது. இன்று காலையிலேயே எனது வீட்டின் அருகே அவர்கள் பைக் பேரணி நடத்தி எனக்கு மிரட்டல் விடுத்தனர். பேரணி நடந்த வழிநெடுகிலும் டிஜே ஸ்பீக்கர்களை அலறவிட்டதோடு, நீதிமன்ற அனுமதியோடு நாங்கள் வைத்திருந்த ஹேண்ட் மைக்குகளையும் பிடுங்கிக் கொண்டனர். வருத்தத்துடன் சொல்கிறேன். காவல்துறை பாஜக தொண்டர்களைப் போலச் செயல்படுகிறார்கள்" என்று குற்றம் சாட்டினார். Gold: தங்கம், வெள்ளியில் இப்போது சூப்பர் நேரம்! முதலீட்டாளர்களே இப்போ நீங்க என்ன செய்யணும்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/mamata-banerjee-reacts-after-clashes-during-tmc-protest-in-bengal




