சென்னை, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் ஆய்வு இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இன்று (18.09.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம்மருத்துவமனையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்பாட்டிற்கான தங்க மோதிரங்கள் வைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட தாய்மார்களுக்கான வசதிகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்காணும் முன்னேற்பாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அலுவலர்களுக்கு ஆலோசனை பாதுகாப்பான சேமிப்பு, கணக்கு பராமரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்காக, 19 பிரசவ மையங்களும் 4 மையங்களுடன் (Hub) இணைக்கப்பட்டுள்ளன. 19 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், பதிவு, சரிபார்ப்பு மற்றும் பயனாளிகளை ஒருங்கிணைத்தல், தொடர்புடைய மையங்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்துதல். பிரசவங்கள் நடைபெறும் CEmONC மையங்களை அலுவலர்கள் ஆய்வு செய்த நடவடிக்கைகள். அனைத்து அரசு பிரசவங்கள், புறநகர் மரூத்துவமனைகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்களின் Parturition Register/பிரசவப் பதிவேடு பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட விவரம். பயனாளிகள் எண்ணிக்கை தயார் செய்யும் நடவடிக்கைகள். மையம் (Hub) மற்றும் கிளை (Spoke) மையங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாடங்கள் (Infrstructure & Logistics) சரிபார்த்தல் விவரம் உள்ளிட்ட தொடர்புடைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, எழும்பூர், அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குப்புலட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/corporation-commissioner-inspects-egmore-government-maternity-hospital



