ராமேசுவரம், நாளை காலை முதல் இரவு வரையிலும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆடித்திருக்கல்யாண திருவிழா ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 16-ந்தேதி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் 15-வது நாளான நேற்று மாலை 4 மணி அளவில் ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து ரதவீதிகளில் சாமி வீதிஉலா வந்தார். அதற்கு முன்பாக கோவில் யானை ராமலட்சுமி மீது மஞ்சள் பூசப்பட்டு அழகாக வலம் வந்தது. இதனை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். கோவில் நடை அடைப்பு திருவிழாவின் 16-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் கடைசி நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் ராமர்பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இரவு வரையிலும் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடவோ, சாமி தரிசனம் செய்யவோ பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/rameswaram-temple-aadi-thirukalyana-festival-darshan-and-bathing-in-holy-water-prohibited-for-devotees-tomorrow




