பெருஞ்சீரகம் இனிப்பு மற்றும் அதிமதுரம் போன்ற சுவையைக் கொண்டிருக்கும். சீரகம் நறுமணத்துடன் சற்று கசப்பு சுவை கொண்டது. பெருஞ்சீரகம் பொதுவாக பச்சை நிறத்திலும், சீரகம் பழுப்பு நிறத்திலும் காணப்படும். அளவில் வேறுபாடு; இரண்டும் ஒரே மாதிரி தோற்றமளித்தாலும், சீரகம் பெருஞ்சீரகத்தை விட சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இரண்டையும் அருகருகே வைத்துப் பார்த்தால் எளிதாக வேறுபடுத்திக் கொள்ளலாம். சுவையில் வேறுபாடு; பெருஞ்சீரகம் சீரகத்தை விட இனிப்பு சுவை கொண்டது. அதன் சுவை வாயைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால், பல ஆண்டுகளாக உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. பயன்பாட்டில் வேறுபாடு; இரண்டும் பிரபலமான மசாலாப் பொருட்களாக இருந்தாலும், அவற்றின் பயன்பாடு மாறுபடும். பெருஞ்சீரகம் இனிப்பு உணவுகளிலும், சீரகம் காரமான குழம்புகள் மற்றும் சமையலிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரகம் அழகுசாதனப் பொருட்களிலும், இரண்டும் அத்தியாவசிய எண்ணெய்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கு பதில் ஒன்றைப் பயன்படுத்தலாமா? சீரகத்துக்கு பதிலாக பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்துவது பொதுவாக ஏற்றதல்ல. இரண்டின் சுவை, வாசனை மற்றும் பயன்பாடு வேறுபடுவதால், ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றைப் பயன்படுத்தினால் உணவின் சுவை மாறிவிடும். நறுமணத்தில் வேறுபாடு: பெருஞ்சீரகம் இனிமையான, மிதமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். சீரகம் தனித்துவமான மணத்துடன், சற்று வலுவான வாசனையைக் கொண்டிருக்கும். சமையல் பயன்பாட்டில் வேறுபாடு: பெருஞ்சீரகம் பிரியாணி, தேநீர், இனிப்பு வகைகள் மற்றும் சில குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் ரசம், குழம்பு, தாளிப்பு மற்றும் மசாலா வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அஜிங்க்யா ரஹானே: ஒரு சகாப்தத்தின் நிறைவு! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்று ஓய்வு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/difference-between-fennel-and-cumin




