சென்னை, சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர்(கிரேடு2), தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பல்வேறு அரசு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. வருடாந்திர தேர்வு அட்ட வணையில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தேர்வுகளுக்கும் குறித்த தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என டி.என். பி.ஸ்.சி. தலைவர் எஸ். கே.பிரபாகர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக் கான அறிவிப்பு நாளை(11-ம் தேதி) டி.என். பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் உதவியாளர் உள்ளிட்ட வழக்கமான பதவிகளுடன் பல்கலைக்கழக உதவியாளர், இளநிலை உதவியாளர், மாநகர தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக்கழக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட புதிய பதவிகளும் முதல்முறையாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுதுறைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்து வரும் நிலையில், த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருப்பதால் காலிப்பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வுகளில் குரூப்-4, குரூப்-2 தேர்வுகளுக்குத்தான் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/education-and-employment/tnpsc-group-2-and-group-2a-exam-notification-to-be-released-tomorrow




