சென்னை, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. போட்டி அட்டவணை 2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகின்றன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன. பெண்கள் கிரிக்கெட் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கினாலும், பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்திய மகளிர் அணி நேரடியாக காலிறுதிச் சுற்றில் களமிறங்குகிறது. காலிறுதி: செப்டம்பர் 18 அரையிறுதி: செப்டம்பர் 20 இறுதிப்போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான போட்டி: செப்டம்பர் 22 ஆண்கள் கிரிக்கெட் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்திய ஆண்கள் அணியும் நேரடியாக காலிறுதிச் சுற்றில் இருந்து தனது போட்டியை தொடங்குகிறது. காலிறுதி: செப்டம்பர் 28 அரையிறுதி: அக்டோபர் 1 இறுதிப்போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான போட்டி: அக்டோபர் 3 அதே நாளான அக்டோபர் 3-ம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற உள்ளது. ஒருவேளை ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால், ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் இந்தியாவின் இரு அணிகள் விளையாடும் சூழல் உருவாகும். 1998-லும் இதேபோன்ற சம்பவம் 1998-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. அன்று இந்திய அணி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற சஹாரா பிரெண்ட்ஷிப் கோப்பைத் தொடரிலும் ஒரே நாளில் விளையாடியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-cricket-schedule-out-october-3-could-see-two-different-india-matches-in-two-countries




