திருப்பதி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக மலையேற்றம் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்தத் துயர சம்பவம் அனந்தகிரி மலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா ஜதராபாத் கஞ்சன்பாக் பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 47). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வாராந்திர விடுமுறை நாளான நேற்று, பிரியா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான அனந்தகிரி மலைப் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள அடர்ந்த வனப்பகுதி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை அவர்கள் கண்டு ரசித்தனர். திடீர் மரணம் ஆசிரியை பிரியா தனது குடும்பத்தினருடன் இணைந்து அனந்தகிரி மலை பகுதியில் உற்சாகமாக மலையேற்றம் (ட்ரெக்கிங்) மேற்கொண்டார். வனப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கோபுரம் (வியூ பாயிண்ட்) அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது, ஆசிரியை பிரியாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மூச்சுத்திணறல் உண்டானது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அவர் அங்கேயே சுருண்டு விழுந்து மயங்கினார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர். பரிதாப உயிரிழப்பு உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர் அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் பிரியவை மீட்டு, விக்காராபாத் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரியா ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மகிழ்ச்சியாக சென்ற சுற்றுலா பயணத்தில், கண் எதிரே ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் கவலையையும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/teacher-dies-suddenly-during-trekking-expedition-heart-wrenching-tragedy-on-ananthagiri-hills




