மதுரை, மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் விஜய், விமானம் மூலம் நாளை (திங்கட்கிழமை) மதுரை வந்து அரசு விழாக்களில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்து மீண்டும் சென்னை செல்கிறார். இதன் காரணமாக மதுரை விமான நிலையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், முதல்-அமைச்சர் பயணிக்கும் வழிகள், தங்குமிடம், செல்லும் இடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நாளை டிரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-drone-ban-in-madurai-tomorrow




