சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- இளம்பெண் புகார் கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. கைது செய்யப்படவில்லை அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும் கூட, இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழகக் காவல்துறையின் நேர்மையின் மீதும், அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்-அமைச்சரின் நிர்வாகத் திறன் மீதும் கடும் சந்தேகத்தை எழுப்புகிறது. எந்தப் பயனும் இல்லை எனவே, தனது சொந்தக் கட்சிக்குள் இத்தனை காமுகர்களை பாதுகாத்து வைத்துக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பைப் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய தவெக நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/which-force-is-the-chief-minister-going-to-form-to-protect-women-from-tvk-functionaries-nainar-nagendran




