மலையாள திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான 'ஹேப்பி வெட்டிங்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. தொடர்ந்து 'கும்பளங்கி நைட்ஸ்', 'தமாஷா', 'ஹலால் லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் இயக்குநர் ராம் இயக்கிய 'பறந்து போ' திரைப்படத்தில் 'குளோரி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களுடன் வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நடிகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது காதலரான அபிடாம் சிரியாக் என்பவரை கிரேஸ் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தனது உடல்நலனிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். 8 மாத கடின உழைப்பின் பலன் கடந்த எட்டு மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்றி, கிரேஸ் ஆண்டனி கணிசமான அளவில் உடல் எடையை குறைத்துள்ளார். அவரது புதிய தோற்றம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. உடல் எடை குறைப்பதற்கு முன்பும், பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரேஸ் ஆண்டனி பகிர்ந்துள்ளார். இந்த 'பிபோர் - ஆப்டர்' புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் அவரது அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/such-a-transformation-in-just-8-months-grace-antonys-photos-go-viral-online




