சென்னை, பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசு மரியாதை இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. மணிமண்டபம் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப்போற்றும் வகையில் அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. நெஞ்சம் நிறைந்த நன்றி அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கும், பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/memorial-hall-for-bharathiraja-seeman-thanks-the-tamil-nadu-chief-minister-for-the-announcement




