Photo: magnific ஒமேகா 3 கொழுப்புகள் - ஒமேகா 3 கொழுப்புகள், மூட்டு பகுதியில் அழற்சி சமிக்ஞைகளை சமநிலைப்படுத்த உதவிடும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும், மூட்டு இயக்கத்தை மேம்படுத்தவும் உதவலாம். Photo: magnific வாரத்திற்கு இரண்டு முறை சால் மன், மத்தி அல்லது கானாங்கெளுத்தி மீன்களை உட்கொள்ளலாம். சைவ உணவு உண்பவராக இருந்தால் தினமும் ஆளிவிதை, சியா, வால்நட் உட்கொள்ளலாம். ஆளி, சியா விதைகளை அரைத்து தயிர், ஓட்ஸ் கலந்தும் சாப்பிடலாம். Photo: magnific மஞ்சள் மற்றும் மிளகு - மஞ்சளில் உள்ள குர்குமின், உடலின் அழற்சி எதிர்ப்பு தன்மைக்கு ஆதரவளிக்கும். மிளகில் உள்ள பைப்பரின், உடல் அதை சிறப்பாக உறிஞ் சிக்கொள்ள உதவிடும். சூடான பாலில் மிளகு மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பருகலாம் Photo: magnific எள் மற்றும் பாதாம் - எள், பாதாம் இவை இரண்டும் மூட்டுகளை சுற்றியுள்ள தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் கால்சியம், மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய வற்றையும் வழங்கக்கூடியவை. Photo: magnific வறுத்த எள்ளை சாலடுகள், கிச்சடியில் தூவி ருசிக்கலாம். எள் சட்னி, எள்ளுப்பொடி தயாரித்து இட்லி, தோசை சாப்பிடலாம். Photo: magnific பால் பொருட்கள் - கால்சியம், வைட்டமின் டி இவை இரண்டும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க துணைபுரியும். குறிப்பாக மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். தினமும் தயிர் அல்லது ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம். Photo: magnific வண்ணமயமான பழங்கள் மற்றும் பெர்ரி பழங்கள் - ஒரு கிண்ணத்தில் ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, கிரான் பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள், மாதுளை, ஆரஞ்சு பழங்களை கலந்து உட்கொள்ளலாம்.தக்காளி மற்றும் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். Photo: magnific வைட்டமின் சி பொருட்கள் - எலுமிச்சை, நெல்லிக்காய், குடைமிளகாய் போன்ற வைட்டமின் சி கலந்த பொருட்களை உட்கொள்வது உடல் கொலாஜனை உருவாக்க வழிவகை செய்யும். அது குருத்தெலும்புகளை வலுப் படுத்த துணைபுரியும். சமையலில் பூண்டு சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/daily-foods-that-improve-joint-health




