பீகார் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடும் Social media creators-களுக்கு, ஒரு வீடியோவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் மாநில முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 'பீகார் சமூக ஊடகம் மற்றும் பிற ஆன்லைன் ஊடக விதிகள், 2026'-ன் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் 13 முன்மொழிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், பீகார் மாநில அரசின் திட்டங்கள் குறித்து Content உருவாக்கும் சமூக ஊடகப் படைப்பாளர்கள் இனி ஒரு வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கத் தகுதி பெறுவார்கள். Social Media பீகார் அரசின் ஊடக விதிகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் Content creators தங்கள் வீடியோ பெறும் ஒவ்வொரு 1 லட்சம்வீவ்ஸ்க்கும் ரூ.10,000 வழங்கப்படும். இந்தப் பணம் 30 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும். ஒரு வீடியோவிற்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படலாம். இதுகுறித்த விரிவான அறிவிப்பைச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (IPRD) விரைவில் வெளியிடும் எனக் கூறப்படுகிறது. வீடியோ வைரலாவதால் மட்டுமே படைப்பாளர்களுக்குப் பணம் கிடைத்துவிடாது. அவர்கள் முதலில் மாநில அரசிடம் பதிவு (Empanelled) செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் சமூக ஊடகக் கணக்குகள், பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கை மற்றும் பிற தகுதிகளைச் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஆய்வு செய்த பிறகே ஒப்புதல் அளிக்கும். அரசின் தகுதி அளவுகோல்களுக்கு உட்பட்டு, மாநிலத் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் உள்ளடக்கங்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும். தகுதி, சரிபார்ப்பு மற்றும் பார்வைகளைக் கணக்கிடுவது குறித்த விரிவான விதிகள் தனியாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. social media - சோஷியல் மீடியா அரசு ஆதரவு Content creators-களுக்குப் பணம் வழங்கும்போக்கு பீகார் தவிர இன்னும் சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. உத்தரப்பிரதேச அரசு 'டிஜிட்டல் மீடியா கொள்கை 2024' மூலம், அரசுத் திட்டங்களை விளம்பரப்படுத்தும் இன்ஃப்ளூயன்சர்கள் மாதத்திற்கு ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ராஜஸ்தான் மாநில அரசு 1 லட்சத்திற்கும் அதிகமான Followers-களைக் கொண்ட Content creators-களுக்கு மாதம் ரூ.25,000, 7,000 முதல் 1 லட்சம் வரை Followers உள்ளவர்களுக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படுகிறது. கர்நாடகா மாநில அரசு சந்தைப்படுத்தல் முகமை மூலம் ரூ.7.2 கோடி நிதியை ஒதுக்கி, BBMP மற்றும் BWSSB போன்ற நகர்ப்புற அமைப்புகளின் சமூக ஊடகங்களை நிர்வகிக்க மாதத்திற்கு ரூ.60 லட்சம் வரை செலவிடுகிறது. 'இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி' - மத்திய அரசு சொல்வது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/technology/social-media/the-government-has-provided-an-opportunity-for-social-media-influencers-to-earn-up-to-1-lakh-per-month



