ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான். ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் மோதிக்கொள்வதுதான் அதிகமாக உள்ளது. 'பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது' என்று அமெரிக்காவும், 'செய்தி பரிமாற்றம் நடக்கிறது' என்று ஈரானும் இந்தப் போர் குறித்த பேச்சுவார்த்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஹார்முஸ் நீர்ச்சந்தி`நான் ஏன் Tata Sons தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்?' - N சந்திரசேகரன் முழு விளக்கம் சில நாள்களாக, ஈரான் போர் மிகவும் தீவிரமடையாததால் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், இப்போதும் மீண்டும் ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சுகள் தீவிரமடைய கச்சா எண்ணெயின் விலை உயர்கிறது. போரினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இழப்பீடு வாங்க பிளான் செய்கிறது ஈரான். இந்த நேரத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எனக்கு ஈரான் மீது நம்பிக்கையே இல்லை. ஈரானை நம்பக்கூடிய கடைசி ஆள் நானாகத்தான் இருப்பேன். அவர்கள் தொடர்ந்து என்னிடம் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஹார்முஸ் நீர்ச்சந்தி இப்போது முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவர்களிடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எங்களிடம் தான் முழு அதிகாரமும் இருக்கிறது. அது எங்களுடையது. ஒருவேளை ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் ஏதேனும் செய்ய முயன்றால், அப்புறம் அவ்வளவுதான். அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது நாங்கள் மிகவும் வலுவான ஒரு நிலையில் இருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக மத்திய கிழக்கையே மிரட்டி வந்த ஒரு நாடு இது" என்று கூறியிருக்கிறார். ஹார்முஸ் நீர்ச்சந்திShare Market: பங்குச்சந்தையின் அடுத்த ஹீரோக்கள்! Banking, Finance-ஐ தாண்டி, இந்த 5 துறைகளை கவனியுங்க ஹார்முஸ் நீர்ச்சந்தியில் தற்போது போக்குவரத்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது குறைந்த அளவிலான. கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து மட்டுமே. ஈரான் கையில் ஹார்முஸ் நீர்ச்சந்தி இருந்தால் தான், அங்கே போக்குவரத்து கடினமாகிறது. ஆனால், ட்ரம்ப் சொல்வது போல, ஹார்முஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், ஏன் இன்னும் போக்குவரத்து எளிதாகவில்லை? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/trump-says-us-controls-hormuz-but-shipping-remains-restricted




