மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டி தீர்க்கும் கனமழையால் மும்பை நகரே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு குர்லா பகுதியில் மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இதேபோல இரவில் மான்கூர்டில் 3 மாடி வீடு இடிந்து விழுந்து 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்றும் மும்பையில் பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே நகரில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நகருக்கு விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கை நேற்று காலை 'ரெட் அலர்டாக' மாற்றப்பட்டது. அதற்கேற்ப நகரில் இடைவிடாமல் மழை கொட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 13 செ.மீ., மழையும், புறநகர்ப்பகுதிகளில் 16 செ.மீ. மழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/mumbai-struggles-amidst-floods-normal-life-of-the-public-disrupted




