கோவை, இயற்கையின் அருள்கொடை மேற்கு தொடர்ச்சி மலை இயற்கையின் அருள்கொடை. இதனால் தான் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மழையை பெறு வதுடன், பசுமையான பகுதியாக விளங்கி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் தொடங்கி குஜராத், மராட்டிய எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே முடிவடைகிறது. இதனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையால் பசுமை பயனை அடைகின்றன. அனைத்தும் அதிசயங்கள். 1 லட்சத்து 29 ஆயிரம் சதுர கிலோ பரப்பளவு கொண்ட இந்த மலைத் தொடர் தென்இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இது, அரபிகடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை தடுத்து தென் மாநிலங்களுக்கு நல்ல மழையை தருகிறது. மேலும் முள்புதர் காடுகள், புல்வெளி பிரதேசங்கள், சோலை காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது. இந்த மலையில் நீலகிரி வரையாடு, சிங்கவால் குரங்கு, ஆசிய யானைகள். மலபார் அணில், இருவாச்சி பறவைகள், நீலகிரி பறவை, பலவகையான அரிய மர தவளைகள், பாம்புகள், அரிய பறவைகள் என்று ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன. முக்கிய அச்சுறுத்தல்கள் இந்த மலைத்தொடரில் தற்போது பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. அதாவது அருகே உள்ள குவாரிகளில் டைன மேட்டை வெடிக்கச் செய்தல், தொழிற்சாலை கழிவுகளை கலத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் அமைத்தல், கண்மூடித்தனமான மணல் கொள்ளை, ரிசார்ட் பெருக்கம், காடுகள் அழிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான சர்ச்சை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே நீடிக்கிறது. அப் போது, மறைந்த சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு, இந்த மலைத்தொடர் முழுவதையும் சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாக கருதி, அதற்கு பல் வேறு நிலைகளிலான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. வரைவு அறிக்கை வெளியீடு இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சூழலி யல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியை (எகோ ஸோன்) உருவாக்குவதற்கான வரைவு அறிவிப்பை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மீண்டும் தற்போது வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துக்கு பின் இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்படும். இதையடுத்து அந்த பகுதியில் சுரங்கப் பணிகள், கல்குவாரிகள், மணல் அள்ளுதல், புதிய அனல் மின் நிலையங்கள், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. அதேவேளையில் நீர்மின் உற்பத்தி போன்ற செயல்பாடுகள் முறைப்படுத்தப்படும் என்றும் இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. சூழலியல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய 'கிராமங்களின் சரியான பெயர்கள் மற்றும் பரப்ப ளவு மற்றும் மாநில அரசுகள் சமர்ப்பித்த பிற பரிந்துரைகள் ஆகியவை குறித்து நிபுணர் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பானது, ஆறு மாநிலங்களில் பரவியுள்ள சூழலியல் உணர்திறன் மிக்க பகுதியின் பரப்பளவை 56,825.7 சதுர கிலோ மீட்டராகவே தக்கவைத்து உள்ளது. நாளைய தலைமுறை ஆறு மாநிலங்களில் பரவியுள்ள 56,825.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான முன்மொழியப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை இந்த அறிவிப்பு அப்படியே தக்கவைத்துள்ளது. இதில் மராட்டியம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணைந்து 20,668 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், கேரளா 9,993.7 சதுர கி.மீ, தமிழ்நாடு 6,914 சதுர கி.மீ, கோவா 1,461 சதுர கி.மீ மற்றும் குஜராத் 449 சதுர கி.மீ பரப்பளவையும் கொண்டுள்ளன. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, சுல்தான்பத்தேரி மற்றும் வைதிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 13 கிராமங்கள் முந்தைய வரைவில் இடம்பெற்றிருந்தன. அவை தற்போதைய அறிவிப்பிலும் தொடர்ந்து சேர்க்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் வரைவு அறிக்கை குறித்து கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை காக்க இந்த அறிக்கையின் மூலம் 6 மாநில அரசு களும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட் டால் நாளைய தலைமுறைகள் இயற்கை சூழலை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய மிகவும் அவசியம் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/will-the-western-ghats-region-be-protected-central-government-releases-draft-report




