பெல்கிரேட், செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, தனது நாட்டின் அதிநவீன ஐஎல்-76 ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழுந்துவிட்டு எரியும் தீ ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ, பலத்த காற்று காரணமாக மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவி, அணைக்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 42 டன் தண்ணீர் இந்த ஐஎல்-76 விமானம் சாதாரணமானது அல்ல. ஒரே தவாணையில் சுமார் 42 டன் தண்ணீரை வானில் இருந்து அக்னி பிழம்புகள் மீது வாரி இறைத்து, தீயை அணைக்கும் அசாத்திய திறன் கொண்டது. நன்றி இந்த விமானத்துடன் ரஷ்யாவின் சிறப்பு படை வீரர்களும் செர்பியா விரைந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த உதவிக்கு செர்பிய அரசு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/serbia-wildfire-putin-sends-advanced-water-bomber-plane




