சென்னை, சிறு தனியார் வியாபாரிகள் மற்றும் தனிநபர்களுக்கு இந்திய உணவுக்கழக கிடங்குகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த உணவு தானியங்களுக்கான மின்னணு ஏலத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பதிலாக நேரடியாக அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்படி ஒரு குவிண்டால் அரிசி அக்டோபர் 31-ந் தேதி வரை ரூ.2.890-க்கும், நவம்பர் 1-ந் தேதி முதல் ரூ.2,970-க்கும் விற்பனை செய்யப்படும். மத்திய அரசு மேலும் மாநில அரசுகள் இ-ஏலம் இல்லாமல் நேரடியாக வாங்கும் அரிசிக்கு ஒரு குவிண்டாலுக்கு முறையே ரூ.2,320 மற்றும் ரூ.2,390 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோதுமைக்கான அடிப்படை விலை ஒரு குவிண்டாலுக்கு தரம் வாரியாக ரூ.2,585 முதல் ரூ.2,600 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பதற்காக பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அரிசிக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.2.320 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது எத்தனாலுக்கு அரிசி வழங்குவதை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் இருந்து மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் ரேஷன் வினியோகத்திற்காக 48 லட்சம் டன் அரிசி தடையின்றி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் பொதுத் தொகுப்பில் சாதனை அளவாக 9 கோடியே 16 லட்சம் டன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/stopping-supply-of-rice-for-ethanol-production-central-government-takes-action-due-to-reduced-monsoon



