திருவனந்தபுரம், கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக, லைட் ஹவுஸ் மற்றும் ஹவ்வா கடற்கரைகள் உள்ளன. இதன் இதமான கடல் அலை மற்றும் இரு நிற மணல் கலந்த இயற்கை அழகை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ரசித்து செல்கிறார்கள். இந்நிலையில் கருமணல் நிறைந்த இந்த கடற்கரையில் கடந்த சில நாட்களாக, கடல் சொறி என அழைக்கப்படும் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி வருகின்றன. ஊதா நிறத்தில் கரை ஒதுங்கிய இந்த ஜெல்லி மீன்களை சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒரு அதிசய பொருளாக பார்த்து செல்கிறார்கள். இந்த வகை ஜெல்லி மீன்களால் மக்களுக்கு பதிப்பு இல்லை என மீனவர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/jellyfish-wash-ashore-at-kovalam-beach




