சில்லறை வர்த்தகம் முதல் பெரு வணிகங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட தற்போதைய காலத்தில், ஏ.டி.எம்.களுக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏ.டி.எம். மூலமாக பணப்பரிவர்த்தனை சுமார் 19 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத பணப்பரிவர்த்தனை புள்ளிவிவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் 2022-ம் ஆண்டில் ஏ.டி.எம். மூலம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 103 கோடியாக பணப்பரிவர்த்தனை இருந்துள்ளது. அதற்கடுத்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்திருக்கிறது. அந்த வகையில் 2023-ல் ஏ.டி.எம். மூலமான பணப்பரிவர்த்தனை ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 298 கோடியாகவும், 2024-ல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 318 கோடியாகவும், 2025-ல் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 955 கோடியாகவும், 2026-ல் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 592 கோடியாகவும் ஏ.டி.எம். வாயிலான பணப்பரிவர்த்தனை குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டுடன், நடப்பாண்டு ஜூலை மாத பரிவர்த்தனையை ஒப்பிடுகையில், ரூ.51 ஆயிரத்து 511 கோடி குறைந்திருக்கிறது. அதாவது 18.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப் பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/atm-cash-transactions-have-been-declining-over-the-past-four-years




