சென்னை, தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண புதிதாக ‘பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம்’ (Public Grievance Portal) உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தலைமை தணிக்கை இயக்குநர் கட்டுப்பாட்டில் ஐந்து தணிக்கை துறைகளான உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறை மற்றும் பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை இயங்கி வருகின்றது. தணிக்கைத் துறையில் வெளிப்படைத்தன்மையும், தணிக்கை நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்கள் தங்களது குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும் புதியதாக பொதுமக்கள் குறைகள் தீர்த்திடும் தளம் (Public Grievance Portal) CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்கள் தங்களது குறைகளை / சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு;- URL ID: Menu Name: Public Grievance Portal” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-platform-to-address-public-grievances-regarding-the-audit-department-tamil-nadu-government-announcement




