வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி நேற்று ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி பூமியில் இருந்து 16 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள அதன் ஆய்வு நிலையை சென்றடைய மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கோள்களை கண்டறிதல், பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் இருள் ஆற்றல் குறித்த ஆய்வு உட்பட பல ஆராய்ச்சி பணிகளுக்காக இந்த தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மேலும், பிரபஞ்சத்தின் மொத்த உள்ளடக்கத்தில் 90 சதவீதத்திற்கு மேல் இருக்கும் இருள் பொருள்(Dark Matter) மற்றும் இருள் ஆற்றல்(Dark Energy) ஆகியவை குறித்தும் ரோமன் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இருள் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகமடைவதற்கு காரணமாக கருதப்படுகிறது. நாசாவின் முதல் தலைமை வானியலாளரான மறைந்த நான்சி கிரேஸ் ரோமனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் இந்த தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கியின் ஆய்வுபரப்பு, 36 ஆண்டுகளாக விண்வெளியில் செயல்பட்டு வரும் நாசாவின் 'ஹபிள்' தொலைநோக்கியைவிட 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/nasa-launches-powerful-telescope-to-help-uncover-the-secrets-of-the-universe




