கோவை, கஞ்சா வியாபாரி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக-கேரளம் எல்லையில் உள்ள அட்டப்பாடி அருகே அகழிபுதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 51). பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது ஏராளமான கஞ்சா வழக்குகள் உள்ளன. கோவை அருகே உள்ள தடாகம் பகுதியில் உள்ளவர்களுக்கு அவர்தான் கஞ்சா சப்ளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தடாகம் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் கேரளம் மாநிலம் அகழி அருகே உள்ள புதூர் பகுதிக்கு சென்று அங்கு மறைந்து இருந்த முருகேசை பிடித்து விசாரணை நடத்திவிட்டு கோவை திரும்பினர். வழக்குப்பதிவு இதற்கிடையில் தடாகம் போலீசார் எப்படி எங்களின் அனுமதி இல்லாமல் கேரளத்துக்குள் வந்து விசாரணை செய்யலாம் என்று அந்த மாநில போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முருகேஷ் தன்னிடம் தேவையில்லாமல் தடாகம் போலீசார் வந்து விசாரணை நடத்துவதாகவும், கேரளம் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அகழி போலீசார் கோவையை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதில் போலீசார் என்று குறிப்பிடாமல், தமிழகத்தில் உள்ள கோவையை சேர்ந் தவர்கள் என்று குறப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்ய முடியவில்லை. கேரளம் மாநிலம் அகழியை சேர்ந்த போலீசாரின் இந்த நடவடிக்கை கோவை மாவட்ட காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் கேரளம் போலீசாரின் இந்த செயலுக்கு பலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-filed-against-8-police-officers-who-went-to-question-a-ganja-dealer




