காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "நமது கலாசாரம் பல்வேறுபட்ட கலாசாரம் என்று சொல்வதை விட தனித்துவமான கலாசாரம் என்று சொல்லலாம். வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழை கற்றுவருகிறார்கள். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ் கலாசசரம், பண்பாட்டை கற்க அவர்கள் தயாராகவும் உள்ளனர். நானும் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன். அதேபோல தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார். ஆளுநரின் இந்தப் பேச்சு, பெரும் பேசு பொருளாகி இருக்கிறது. ஏற்கெனவே மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. `இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்.'- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து விஜய் மில்டன் உருக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/tn-governor-arlekar-about-tamil-language




