கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த யானை நாள்தோறும் மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையை கடந்து விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வருவதால், பயிர் சேதம் ஏற்பட்டாலும், மனிதர்கள் யாரையும் தாக்கியதில்லை. பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இந்த யானை மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து செல்வதை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடுவது வழக்கம். பாகுபலி யானைக்கு சிகிச்சை இந்த நிலையில் வனப்பகுதிக்குள் மற்றொரு காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானையின் இடது பின்புறத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வனக் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் காயத்திற்கு மருந்துகள் நேரடியாக செலுத்த இயலாததால், மருந்துகள் கலந்த களியை உருண்டைகளாகச் செய்து யானைக்கு வைத்து வருகின்றனர். அந்த களி உருண்டைகளை யானை உட்கொண்டு வருகிறது. பாகுபலி யானைக்கு சிகிச்சை இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாகுபலி யானைக்கும் மற்றொரு காட்டு யானைக்கும் வனப்பகுதிக்குள் ஏற்பட்ட மோதலில் தந்தம் குத்தியதால் பாகுபலி யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் வனப்பணியாளர்கள் மற்றும் வனக் கால்நடை மருத்துவர்கள் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்றனர். கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது - அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/environment/baahubali-elephant-injured-in-clash-with-wild-elephant-in-mettupalayam



