சென்னை, விசிலும், இரட்டை இலையும் ஒன்று என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து விசாரித்து, த.வெ.க.வின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. ஏன் திருடுகிறார்கள்? இதன்படி சென்னை தலைமை செயலகத்தில் அ.தி.மு.க. எம்.பி இன்பதுரை, தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளோம். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசில் சின்னமும், இரட்டை இலை சின்னமும் ஒன்று தான் என கூறுகிறார். அவர் கூறியது தவறு. இரண்டு கட்சிகளுக்கும் வேறு வேறு சின்னங்கள் உள்ளன. எங்கள் சின்னத்தை ஏன் திருடுகிறார்கள்? ஏன் கடன் வாங்குகிறார்கள்? அங்கீகாரம் ரத்து இது வாக்காளர்களை குழப்பம் செயலாகும். அவரின் பேச்சினால், அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் ஒன்று சேர்ந்து விட்டதாக பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள். அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க நினைப்பதாக மக்கள் விசிலுக்கு வாக்களிக்க வழிவகுக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளது. அமைச்சர் பேசியது மக்களை திசை திருப்பும் செயலாகும். இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். அமைச்சரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மேலும், இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இது தொடர்பான ஆதாரங்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கி உள்ளேன். தேர்தல் ஆணையம் உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும். குறிப்பாக தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. இல்லையென்றால், நாளை அ.தி.மு.க. தலைமை அலுவலகமே எங்களுடையது, அங்க தான் தற்போது நாங்கள் இருக்கிறோம் என்று கூறி மக்களை திசை திருப்புவார்கள். அமைச்சரின் பேச்சு ஜனநாயகத்தில் ஒரு கட்சியை விமர்சிக்கலாம், கொள்கையை விமர்சிக்கலாம். கடந்த காலத்தை பற்றி பேசலாம். ஆனால், ஒரு கட்சியை களவு செய்வதை நான் இப்போது தான் பார்க்கிறேன். கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சின்னம் என்பது அவர்களின் அடையாளமாக இருக்கிறது. அந்த அடையாளத்தை களவாடும் செயலாக தான் அமைச்சரின் பேச்சு இருக்கிறது. தற்போது அ.தி.மு.க. சார்பாக அளித்துள்ள புகாரை விசாரித்து, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். மோசடி - தவெக முதலில் அ.தி.மு.க.வின் வெற்றியை திருடினார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திருடினார்கள், தற்போது கட்சியை திருடுகிறார்கள். மொத்தத்தில் அவர்கள் செய்வது மோசடி. மோசடியே உன் பெயர் என்ன தவெகவா எனக் கேட்கிற அளவுக்கு அவர்களின் நடவடிக்கை தவறாக இருக்கிறது. அ.தி.மு.க. இதனை சட்டரீதியாக எதிர் கொள்ளும் இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-whistle-symbol-the-same-as-the-two-leaves-symbol-aiadmk-lodges-complaint-with-the-election-commission-seeking-the-cancellation-of-tvks-recognition




