தற்போது லண்டன் பயணத்தில் இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டிற்கு முதலீடு ஈர்ப்பதற்காக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சிலர் விஜய்யுடன் லண்டனுக்குப் பயணித்திருக்கின்றனர். நேற்று (செப்டம்பர் 15), லண்டனின் மிக உயரமான கட்டடம், ‘தி ஷார்ட்’ (The Shard)-ல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜயைக் காண ஆயிரக்கணக்கானோர் தி ஷார்ட்டில் கூடியிருந்தனர். தி ஷார்ட் `தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி.' - அன்பில் மகேஸ் வீடுகளில் அதிரடி ரெய்டு! நிகழ்ச்சி ரத்து ஆனால், கடைசி நேரத்தில், லண்டன் போலீஸார் கூறிய ‘பாதுகாப்புக் காரணத்திற்காக’ அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால், விஜய் தரப்பிலிருந்து அங்குக் கூடியிருந்த மக்களுக்கு, “பொதுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை, அனுமதி இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டது. இன்று இந்தியா திரும்புகிறார் விஜய். இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டிற்காக ரூ.12,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/vijay-london-event-cancelled-over-safety-concerns




