சென்னை, மாணவர் சேர்க்கை சரிவால், நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, உயர்கல்வித் துறையிடம் கடிதம் அளித்துள்ளன. 55 அரசு பாலிடெக்னிக்குகள் தமிழக உயர்கல்வித் துறையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 400-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. டிப்ளமா படிப்பில் ஆர்வம் குறைவு கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமா படிப்பின் மீது மாணவ, மாணவியர்களின் ஆர்வம் குறைந்து வருவதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அரசு கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 22,600 இடங்களில் 12,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. தனியார் கல்லூரிகள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 1.30 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 24,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. சேர்க்கையில் பங்கேற்காத 70 கல்லூரிகள் தொடர்ந்து மாணவர் சேர்க்கை சரிந்து வருவதால், நடப்பு கல்வியாண்டில் 70 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்கவில்லை. இக்கல்லூரிகள் தங்களது கல்வி நிறுவனங்களை மூட அனுமதி கோரி, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. பணியாளர்கள் நிலை குறித்து விளக்கம் கல்வி நிறுவனங்களை மூடினால், அங்கு பணியாற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு மேலும், அந்த 70 கல்வி நிறுவனங்களில் பிற வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து படித்து வந்தால், அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் கல்வி நிறுவனங்களிடம் உயர்கல்வித் துறை விளக்கம் கேட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/decline-in-student-admissions-70-private-polytechnics-decide-to-close




