தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது.இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார். அதன்படி, 22.6.2026 அன்று முதல் தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக, தமிழகம் முழுவதும் 107 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. முதல் தவணையாக இதற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளன.இந்தநிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில், முதல்-அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) நேரடியாக வந்து தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு அவர், முதன்முறையாக மதுரைக்கு வர இருப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 'ரோடு ஷோ' முன்னதாக இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் பகல் 11 மணிக்கு மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி விமான நில யத்தில் இருந்து புறப்படுகிறார். 'ரோடு ஷோ'வாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக செல்ல உள்ளார். அதற்கு ஏற்ப அந்த பகுதிகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் சவுக்கு கம்புகள் மூலம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 35 குழந்தைகளுக்கு அணிவிப்பு மதியம் 12 மணியளவில் மதுரை அரசு ஆஸ்பத்திரி சென்றடைகிறார். அரசு ஆஸ்பத்திரி கருத்தரங்க கூடத்தில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் குத்துவிளக்கு ஏற்றி பேசுகிறார்.விழாவின்போது மதுரை மாவட்டத்தில் பிற அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தன்கைகளால், தங்க மோதிரங்களை வழங்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று, அந்த ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்க இருக்கிறார். அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரிக்கிறார். முதல்-அமைச்சர் கைகளால் எந்தெந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன? என்ற விவரம் முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் தவிர இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் உள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப் பட இருக்கிறது. விழாவையொட்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து ஏற்பாடுகளும் நேற்று இரவில் நிறைவு பெற்றன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரசு ஆஸ்பத்திரி கட்டிடங்களுக்கு பல நிறங்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. மேலும், கருத்தரங்க கூடமும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து, மகாத்மா காந்தி அருங்காட்சியகத்துக்கு சென்று முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார். அதன்பின்னர், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-launching-the-thai-maman-thanga-mothiram-scheme-today




