கோவை, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை போத்தனூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதாவது, அடுத்த மாதம் (அக்டோ பர்) 4-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து பீகார் மாநிலத்திற்கு புறப்படும் போத்தனூர்-பரவுனி சிறப்பு ரெயில் (எண்: 06021) செவ்வாய்க்கிழ மைகளில் மதியம் 1.30 மணிக்கு பரவுனி ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 4-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு பரவுனி நிலையத் தில் இருந்து புறப்படும் பரவுனி-போத்தனூர் சிறப்பு ரெயில் (எண்: 06022) வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலை யத்தை வந்தடையும். இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜய வாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திரப்பூர், நாக்பூர், ஜபல்பூர், சாட்னா, மானிக்பூர், டானாபூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-podanur-to-bihar




