சென்னை, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்புத் தீவிர திருத்தம் இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இந்திய தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-ல் தெரிவித்த கடிதத்தின் வாயிலாக, சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் / முதல் முறையாகத் தகுதி பெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள ”உறுதிமொழிப் படிவம்” (Declaration Form), சிறப்புத் தீவிர திருத்த (SIR) காலக்கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும். சிறப்புத் தீவிர திருத்தம் அல்லாத காலக்கட்டங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன்படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும். சிறப்பு முகாம்கள் இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதன்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-camps-in-chennai-to-add-names-to-the-electoral-roll




