டோக்கியோ, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஒரேஒரு சர்வதேச டி20 போட்டியில் இன்று விளையாடியது. ஜப்பானின் டொஷிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மழை காரணமாக இப்போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 9 ரன்னிலும், அபிஷேக் சர்மா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இஷான் கிஷன் 3 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். திலக் வர்மா 1 ரன்னிலும், ஷிவம் துபே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஜப்பான் தரப்பில் சார்லி 2 விக்கெட்டுகளையும், இப்ராகிம், பெஞ்சமின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 5 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி, 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் யஷ் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வெற்றி தொடர்பாக இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது, உண்மையாகவே ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தொடக்க வீரர்களும் வழக்கம்போல் ரன்கள் குவிக்க முடியாமல் சிரமப்பட்டனர். குறிப்பாக சுழற்பந்து எந்த வேகத்தில் வருகிறது, எவ்வாறு திரும்புகிறது என்பதை கணிப்பது கடினமாக இருந்தது. நான் களமிறங்கியபோது, முடிந்தவரை ஒன்று, இரண்டு ரன்களாக எடுத்து ஆட்டத்தை நகர்த்த வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடன் பேட்டிங் செய்த வீரர்களிடமும் இதுகுறித்து பேசினேன். ஆனால் இந்த ஆடுகளத்தில் அதையும் செயல்படுத்துவது சற்று கடினமாக இருந்தது. பந்து எவ்வாறு வருகிறது என்பதை பொறுத்து அதற்கேற்ப விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். பந்து திரும்பி, ஆடுகளத்தில் சற்று நின்று வந்தால், அதன் வேகத்தை பயன்படுத்தி பின்பக்கத்தில் நின்று விளையாடி, ஒன்று மற்றும் இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தேன். அது நல்ல பலனை கொடுத்தது. ஐந்து ஓவர் கொண்ட ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் எந்த அணியின் பக்கமும் திரும்பக்கூடியது. நீங்கள் எவ்வளவு சிறந்த அணியாக இருந்தாலும் பரவாயில்லை. எதிரணி அணியும் சிறப்பாக செயல்பட முடியும்.இன்று ஜப்பான் அணி வெளிப்படுத்திய அணுகுமுறை மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்களின் ஆட்டத்தை பாராட்ட வேண்டும். அவர்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகளுக்கு எதிராக இன்னும் சில போட்டிகளில் விளையாட உள்ளனர். அந்தப் போட்டிகளும் அவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். எங்களை பொறுத்தவரை, இந்தப் போட்டி ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்வதற்கும், அங்குள்ள சூழலுக்கு பழகுவதற்கும் சிறந்த பயிற்சியாக அமைந்தது.என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/victory-against-the-japanese-team-what-did-the-indian-team-captain-say




