கோவை, கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி ஒருவர், சிங்கப்பெண் அதிரடிப் படை உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தான் 16 வயதாக இருக்கும்போது பள்ளியில் படித்தபோது என்னை விட 2 வயது குறைவான 14 வயது மாணவர் காதலிப்பதாக கூறினார். நான் அந்த மாணவரிடம் பேசி வந்தேன். ஒரு நாள் அந்த மாணவர், என்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். அதை செல்போனில் வீடியோவும் எடுத்தார். தற்போது அந்த மாணவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை காண்பித்து மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்பேரில் தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவரை பிடித்து விசாரித்தனர். மேலும் கோவை மாநகர பகுதியை சேர்ந்த மகளிர் போலீசார், அந்த பள்ளி மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது 19 வயது ஆகிறது. ஆனால் அவர் பாதிக்கப்பட்டபோது 16 வயது. எனவே அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடப்பட்டு உள்ளது என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-sexual-harassment-video-blackmail-pocso-case




