குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நீண்ட காலமாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி, பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர நாடாக செயல் பட்டு வந்த பலுசிஸ்தானை, 1948-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. அன்று முதல் பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக போராடி வருகின்றனர். இதற்காக பலுசிஸ்தானில் பல்வேறு விடுதலை அமைப்புகள் இயங்கி வருகின்றன. பலுாசிஸ்தான் இனி தனி நாடாக செயல்படும் என சமீபத்தில் பலுாசிஸ்தான் விடுதலை அமைப்புகள் அறிவித்தன. இந்த நிலையில், பலுசிஸ்தான் விடுதலை அமைப்புகள் மற்றும் தேசிய தலைவர்கள் இணைந்து ஆகஸ்ட் 11-ந்தேதியை, ஆண்டுதோறும் பலுாசிஸ்தானின் சுதந்திர தினமாக கொண்டாடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு பலுசிஸ்தானில் பொதுமக்கள் தங்கள் வீடுகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பலுாசிஸ்தானின் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதோடு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலூசிஸ்தானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் பலுாசிஸ்தான் விடுதலை அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/balochistan-declares-august-11-as-independence-day




